சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி – அரை படி
  • பால் – 2 லிட்டர்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்து வந்ததும், களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு கிளறி விட வேண்டும்.

பின் இடையிடையே கிளறி விட்டு, சிறிது நேரம் களைத்து இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பால் பொங்கல் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.