மக்கள் செல்வன் படத்தில் இணைந்த கபாலி பட நடிகை!

  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது "யாதும் ஊரே யாவரும்

By Fahad | Published: Apr 08 2020 08:30 AM

  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது "யாதும் ஊரே யாவரும் கேளிர்"படம் தயாராகி வருகிறது.
  • இந்த படத்தில் மெட்ராஸ் மற்றும் கபாலி பட நடிகையான ரித்விகா நடிக்குள்ளாரம்,இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். 
நடிகை ரித்விகா தமிழ் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து வருகிறார்,இவர் முதல் முறையாக கார்த்திக் சிவகுமார் நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.மேலும் ரஜினி நடித்த கபாலி படத்தில் நடித்துள்ளார் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்தில் நடிக்கவுள்ளார் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தை வேங்கட கிருஷ்ணா ரோகநாத் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்,அடுத்தாக நடிகர் விவேக் முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்க வருகிறார்.இப்படத்தில் ஒரு முக்கிய கௌரவ தோற்றத்தில் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் லாபம், கடைசி விவசாயி, துக்ளக், மாஸ்டர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல படங்கள் தயாராகி வருகிறது.

Related Posts