உச்சநீதிமன்றத்தில் நாளை 3 முக்கிய வழக்குகளின் தீர்ப்பு..!

நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம்

By murugan | Published: Nov 13, 2019 12:53 PM

நீண்ட நாள்களாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.இதனால் அயோத்தி வழக்கு ஒரு முடிவிற்கு வந்தது. இந்நிலையில் நாளை மூன்று முக்கிய வழக்குகளின் தீர்ப்பை உச்சநீதிமன்றம்  வழங்க உள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கும் தீர்ப்பிற்கு எதிராக மறு ஆய்வு மனுகள் தாக்கப்பட்டனர்.இந்த வழக்கின் தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் அறிவிக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல்காந்தி "காவலாளியே திருடன் "என கூறியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. மேலும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பின் மீது தொடரப்பட்ட சீராய்வு மனுகள் மீது ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc