ஜெயலலிதாவாக நடிக்க உள்ள ஹீரோயின் லிஸ்டில் புதிதாக இணைந்த ரம்யா கிருஷ்ணன்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர். அதற்கான வேலைகளில் பலர் பிசியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள வெப் சீரிஸாக எடுக்க கௌதம் வாசுதேவ் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.

கௌதம் மேனன் இயக்கவுள்ள இந்த வெப்சீரிஸிற்கு குயின் என தலைப்பிடப்பட்டுள்ளதாம். ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளாராம். இளம்வயதிலேயே விசுவாசம் படத்தில் விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த  அனிகா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இளம் பருவ ஜெயலலிதா வரலாற்று காட்சிகளை மட்டும் கிடாரி பட இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.