ஜம்மு காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசு தலைவர் ஆட்சி

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.

இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
Image result for ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீர்
பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. இதன் பின் .ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.  ஆளுநர் ஆட்சி முடிவடைந்த பின்னர்  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சியை  மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.