தயாரிப்பாளர் பா ரஞ்சித்தின் அடுத்த படம்! இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட அப்டேட்!

மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தனது நீலம் புரடக்ஷன் சார்பாக தயாரிப்பாளராக   பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ரசிகர்கள் செய்யும் நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது.

இந்த படத்தில் அடுத்து ‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயககனாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தினை அதியன் அதிரை  என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அமெரிக்க கொடியை போர்த்தி கொண்டு நடிகர் தினேஷ் நிற்பதுபோல் காண்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.