Snapchat-உடன் போட்டி போட இந்தியர் தயாரித்த, சர்வ வசதியும் கொண்ட ஆப்..! பெயர் என்ன தெரியுமா?

இன்றைய கால கட்டத்தில் எதை அதிகம் பயன்படுத்துகிறோம் என்று கேட்டால் அதற்கான பதில் மொபைலாக தான் இருக்கும். பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் நாம் பயன்படுத்த கூடிய சாதாரண ஆப்ஸ்களை விட சமூக ஊடக வசதி கொண்ட ஆப்ஸ்களையே நாம் விரும்பி பயன்படுத்துவோம்.

இந்த வகை ஆப்ஸ்களில் Snapchat-யும் ஒன்று. பல்வேறு வசதிககொண்டு பலரால் பயன்படுத்தப்படும் இந்த ஆப்பிற்கு போட்டியாக இப்போது ஒரு இந்தியரின் ஆப் களம் இறங்க உள்ளது. அது என்ன ஆப் என்கிற தகவலை இனி தெரிந்து கொள்வோம்.

ஆப்ஸ் பலவிதம்!
பிளேஸ்டோரில் நாளுக்கு நாள் பதிவேற்றம் செய்ய கூடிய ஆப்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றில் மிக சிலவற்றை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் Snapchat-ம் ஒன்று. இதில் பலவித வசதிகள் இருப்பது நமக்கே நன்கு தெரியும். மற்ற ஆப்ஸ்களை விட இது தனித்துவம் நிறைந்ததாகவே உள்ளது.

சவால்
இப்போது இந்த செயலியுடன் போட்டி போட கூடிய ஒரு புதுவித ஆப் வந்துள்ளது. அது தான் PIxalive என்கிற ஆப். இதில் நம் நண்பர்கள் மற்றும் பலரை தொடர்பு கொள்ளும் வசதியும் உண்டு. டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்ற சிறப்பு வசதிகளும் இதில் உள்ளதாம். இந்த புதிய ஆப் இது போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியரின் கண்டுபிடிப்பு
இந்த ஆப்பை உருவாக்கியவர் ஒரு இந்தியர் என்பதே இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த செயலியை ராஜசேகர் என்பவர் உருவாக்கியுள்ளார். இதை இவர் உருவாக்கவும் ஒரு நோக்கம் உள்ளது. 2017 ஆம் ஆண்டு Snapchat நிறுவனர் இந்த செயலியை இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்ற ஏழை நாடுகளில் தனது கண்டுபிடிப்பை பயன்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த விஷயம் இவை பெரிதும் பாதித்துள்ளது. இதற்காகவே இவர் இந்த அப்பை உருவாக்கியுள்ளார். சவாலை இந்தியர்கள் எப்போதும் விரும்புவார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

Leave a Comment