“இந்தியாவின் முதல் பெண்கள் பீர்” இது தான் – வித்யாசமான பெயர் கொண்ட பீர் ரகம்!

ஹரியானா மாநிலத்தில் உள்ள “பப்” ஒன்றில் இந்தியாவின் முதல் பெண்கள் பீர் என்ற அடைமொழியுடன் கூடிய பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

குருகிராம் பகுதியில் உள்ள அர்ட்டார் 29 என்ற பப் நிறுவனம் தான்  இந்த ரக பீரை அறிமுகம் செய்துள்ளது. பீரின் கசப்பு சுவையை பொறுத்து பெண்கள் பலர் பீர் அருந்த மறுக்கிறார்கள்.அவர்களுக்காக இந்த புதிய ரக பீரை அறிமுகம் செய்திருப்பதாக பப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

முதலில் “சம்மர் பீர்” என்றே பெயரை வைத்தோம். பின்னர், வடிக்கையாரின் விருப்பத்திற்கு ஏற்பவே இது “பெண்கள் பீர்” என்று மாற்றப்பட்டது என்று அந்த பப் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பெயரை கண்டு நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்திருந்தாலும் அதையும் கடந்து செல்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.