பெண்கள் டி20 உலகக்கோப்பை: நிதானமாக விளையாடி வரும் இந்திய அணி .!

  • இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர்.

By Fahad | Published: Mar 29 2020 02:13 AM

  • இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றனர்.
  • இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர்.
பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதிவருகின்றனர்.இந்த  போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி வீராங்கனைகள்: ஷஃபாலி வர்மா, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன் ), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். பங்களாதேஷ் அணி வீராங்கனைகள்: முர்ஷிதா கதுன், ஷமிமா சுல்தானா, சஞ்சிதா இஸ்லாம், நிகர் சுல்தானா (விக்கெட் கீப்பர்), ஃபர்கானா ஹோக், ருமேனா அகமது, சல்மா கதுன் (கேப்டன் ), பாஹிமா கதுன், ஜஹனாரா ஆலம், பன்னா கோஷ், நஹிதா அக்டர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். Image முதலில் இறங்கிய  இந்திய அணியின்  தொடக்க வீரர் தனியா பாட்டியா 2 ரன்னில் வெளியேற பின்னர் ஷெபாலி வர்மா , ஜெமிமா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய  ஷெபாலி வர்மா 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய கேப்டன்  ஹர்மன்பிரீத் 2 ரன்னில் நடையை கட்டினார். தற்போது களத்தில் தீப்தி சர்மா 4  , ஜெமிமா 33 ரன்களுடன் இருவரும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்து உள்ளனர்.