பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா.. ஐநாவில்,.மூக்கு உடைந்த பரிதாவம்.. சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்..

  • இந்தியாவுக்கு பல முனைகளில்  குடைச்சல் கொடுக்கும் சீனா.
  • காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது,  காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், சீனா மட்டும், இந்த விஷயத்தில் தனித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கருத்தை, சீனாவும் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Image result for china un spoke kashmir

இந்தியாவின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் சீனா இந்த விவகாரத்திலும் நுழைந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்கும் இந்தியாவின் முயற்ச்சிக்கு பல வழிகளில் தடையை ஏற்படுத்தியது. இதேபோல் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஆதரவு தந்த போதிலும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை ஏற்படுத்தியதை நினைவு கூறலாம்.

author avatar
Kaliraj