காஷ்மீர் நிலவரம் : உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வடக்கு பிராந்திய தளபதி ஆலோசனை

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நிலவி வந்தது.அங்கு திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் இந்தியா முழவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.அறிவித்த முதலே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் தற்போது  காஷ்மீர் நிலவரம் குறித்து ஸ்ரீநகரில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.