ஏர்டெல்,வோடோபோன், ஐடியா வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்..எச்சரிக்கும் நிறுவனங்கள்..!!

25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் இன்னும் சில வாரங்களில் துண்டிக்கப்படும் என்று வோடாபோன்,ஐடியா,ஏர்டெல் போன்று நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image result for VODAFONE AIRTEL IDEA USERS

இந்த துண்டிப்பு நடவடிக்கை எதுக்கு என்று கேட்கும் வாடிக்கையாளர்க்கு பதில் ஒன்றையும் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 2ஜி செல்போனில் மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் இனி வருங்காலத்தில் செயலிழந்துவிடும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் சுமார்  ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 15 கோடி வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்து என்று கூறியுள்ளது.

Image result for VODAFONE AIRTEL IDEA USERS

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாத வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்திக் கொள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளது. ஏனெனில் இரண்டு சிம்கார்டுகளுடன் கூடிய செல்போன்களை வைத்திருப்பவர்கள், தங்களிடம் உள்ள 2ஜி எண்ணுக்கு ரீசார்ஜ் என்பதே செய்வதில்லை மேலும் ரீசார்ஜ் செய்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for cell phone users

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment