அந்த சீட்டில் மட்டும் நான் உட்கார மாட்டேன் என்று கூறிய பார்த்திபன்! இது தான் காரணமா !

நடிகர் பார்த்திபன் கோலிவுட் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.இவர் தற்போது “ஒத்த செருப்பு” படத்தை  இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் கோவை சென்றுள்ளார்.அப்போது அவருக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய பட்டிருந்ததாம்.அந்த வாகனம் கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய வாகனமாம்.அதில் அவர் அமரும் இருக்கையில் பார்த்தீபன் அமர மறுத்து விட்டாராம்.இது குறித்து அவர் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “கோவையில் எனக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய (கலைஞர் பயன்படுத்தியது) அவ்விருக்கைக்கென ஒரு தலைவர் இருக்கையில் நான் அமரமாட்டேன் எனக்கூறி அடுத்தமர்ந்தேன்!மதிக்கப்பட்ட -வரின் நினைவாக அதை வாங்கியவர் என் மதிப்புக்குள்ளானார்,சச்சின் காரை வாங்கி என் நட்புக்குள்ளானார்!Green crest வாழ்க “என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment