கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ உள்ளேன் – ஜி.வி.பிரகாஷ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் ஜி.வி.பிரகாஷ்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், மே -3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளன.

சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு யூடிபில் ரசிகர்களுடன் உரையாடி அவர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், தற்போது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் உரையாட உள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் மே -1ம் தேதி இரவு 8 மணிக்கு ஜிவிபிரகஷ் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதன் மூலம் வரும் வருமானத்தை  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.