கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!

கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!

ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், வார்னர் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் பேர்ஸ்டோவ் 5 ரன்னில் விக்கெட்டை இழக்க மனிஷ் பாண்டே களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த வார்னர் 36 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே  51 ரன்கள் குவித்தார். அதில், 2 சிக்ஸர் , 3 பவுண்டரி அடங்கும். இதைத்தொடர்ந்து, விருத்திமான் சஹா 30 எடுக்க இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா அணி  143 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?