கட்டிப்பிடிங்க, வெறுக்காதீங்க.! கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பாஜகவிற்கு வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்.!

கட்டிப்பிடிங்க, வெறுக்காதீங்க.! கட்டிப்பிடி தினத்தை முன்னிட்டு பாஜகவிற்கு வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ்.!

  • bjp |
  • Edited by Bala |
  • 2020-02-12 17:13:18
  • நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர், பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது கூறிய காங்கிரஸ் தலைவர் வெறுப்பு பிரச்சாரத்தைக் கைவிடுங்கள் என்றும், அனைவரது மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்று பேசிய அவர், இறுதியாக மோடி கட்டியணைத்தார். பின்னர் ராகுல் காந்தியின் இந்த செயல் பல தரப்பினரிடையேயும் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் கட்டிப்பிடி (Hug day) தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு காங்கிரஸ் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைக்கும் வீடியோவைப் பதிவிட்டு கட்டிப்பிடி தின வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ பதிவில், கட்டிப் பிடி தினத்தன்று பா.ஜ.கவுக்கு நாங்கள் ஒரு மெசஜ் வைத்துள்ளோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன் என்று ராகுல் காந்தி பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர். மேலும்  அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள் கோழை என்றும், அன்பை வெளிப்படுத்துவது தைரியத்தின் தனிச்சிறப்பு என்ற காந்தியின் விளக்கத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இறுதியாக காங்கிரஸ் அன்பை நம்புகிறது, வெறுப்பை அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Posts

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் தெரியுமா?
ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ முதல்வர் புகழாரம்
#NationalUnityDay சிஆர்பிஎஃப் மற்றும்  பிஎஸ்எஃப் கம்பீர அணிவகுப்பு -பிரதமர் பங்கேற்பு
7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்! தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்
#National Unity Day-145வது பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மரியாதை
காமடி நடிகரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட்!
கர்ஜிக்கவில்லை..வீட்டுப் பூனை போல் மியாவ் செய்கின்றன.....வைரலாகும் வீடியோ...
முடிசூடா மன்னனாக மாறுகிறார் சீன அதிபர்... ஆயுள் முழுக்க அதிபர், கட்சி தலைவர்,இராணுவ தலைவர்....
இராணுவ வீரர்களை பார்த்து உள்ளுணர்வுடன் சல்யூட் அடித்த சிறுவன்... பாஜக எம்பி பரிசு...
மும்பையில் முகக்கவசம் அணியாவிட்டால் நூதன தண்டனை!