சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி

By leena | Published: Mar 02, 2020 12:18 PM

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே மாங்காய் என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மாங்காயை வைத்து ஏதாவது விதவிதமான உணவுகளை செய்யும் போது, அனைவருமே விரும்பி சாப்பிடுவர். தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை 
 • மாங்காய் - 1
 • சின்ன வெங்காயம் - 10
 • தக்காளி - பாதி
 • சாம்பார் போடி - 2 தேக்கரண்டி
 • வெல்லம் - 4 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணெய் - தேவைக்கேற்ப
 • கடுகு - அரை தேக்கரண்டி
 • சீரகம் - அரை தேக்கரண்டி
 • உளுந்து - அரை தேக்கரண்டி
 • கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
 • கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை  முதலில் மாங்காய், வெங்காயம் மற்றும் தக்காளி அனைத்தையும் நறுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் இதில் நறுக்கின வெங்காயம், மாங்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம வதங்கியவுடன், சாம்பார் போடி சேர்த்து கிளற வேண்டும். இதில் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
Step2: Place in ads Display sections

unicc