அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டர் தயாரிக்க இந்துஸ்தான் முடிவு..!

அமெரிக்காவின் அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு இணையான ஹெலிகாப்டரைத் தயாரிக்க இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன் கூறும்போது  “அப்பாச்சி” ரக ஹெலிகாப்டருக்கு இணையான புதிய ஹெலிகாப்டரை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

அந்த ஹெலிகாப்டருக்கான வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து விட்டது. முன்மாதிரியாக ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பதற்கு 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் தேவைப்படும் என கூறினார். மத்திய அரசு இந்த ஆண்டு ஒப்புதல் கொடுத்தால் வருகின்ற 2027-ஆம் ஆண்டுக்குள் முதல் ஹெலிகாப்டர் தயாராகிவிடும் என கூறினார்.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெலிகாப்டர்களை இறக்குமதி செய்ய வேண்டியது இருக்காது என ஆர்.மாதவன் தெரிவித்தார்.

author avatar
murugan