சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி?

  • சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி?

கேழ்வரகு நம் அனைவர்க்கும் தெரிந்த சத்தான உணவு பொருட்களில் ஒன்று. கேழ்வரகு பல உணவுகளை செய்ய பயன்படுவது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதுக் கூட.

தற்போது, சுவையான கேழ்வரகு பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Related image

தேவையானவை

  • கேழ்வரகு மாவு – அரை கப்
  • மக்காசோளமாவு – அரை கப்
  • மிளகாய் தூள் –  கால் டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • பச்சைமிளகாய் – 2
  • நறுக்கிய இஞ்சி – 1டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • கொத்தமல்லி – 1 கைப்பிடி
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இவை அனைத்தையும், கேழ்வரகு மற்றும் சோள மாவுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து பக்கோடாவாக எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது, சுவையான, ருசியான பக்கோடா தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment