தித்திக்கும் சுவையில் பப்பாளி குருமா செய்வது எப்படி

பப்பாளி பழம்  நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை தரவல்லது.நாம் பப்பாளி பழத்தை பழமாக உட்கொண்டு பல நன்மைகளை அடைந்து இருப்போம்.

  • பப்பாளி குருமா செய்வது எப்படி?

இந்த பழத்தை இவ்வாறு  கொடுப்பதால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.இதனை உணவில் சேர்த்து குருமாவாக சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து நாம் படித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பப்பாளி காய் – அரை கப்

எண்ணெய் – இரண்டு குழிகரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

அண்ணாச்சிபூ – ஒன்று

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 2

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1/4

உப்பு – தேவைகேற்ப

சோம்பு தூள் – ஒரு டீஸ்பூன்

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

தேங்காய் பால் – ஒரு டம்ளர்

இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்

கறிவேபில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தனியா தூள்- இரண்டு டீஸ்பூன்

 

செய்முறை:

 

 

வாணலியில் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , ஏலக்காய், அண்ணாச்சிபூ,பட்டை, லவங்கம் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பப்பாளி காய்  சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். அதற்கு பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, கறி வேபில்லை சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர்  மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

கெட்டியான தேங்காய் பால் சேர்த்து காய் வெந்ததும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்த பின்பு கொத்தமல்லிஇலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான பப்பாளி குருமா தயார்.

Leave a Comment