வேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.!கண்கலங்கும் தாயார்.!

வேடிக்கை பார்க்க வெளியே சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். கண்ணீர்

By Fahad | Published: Apr 05 2020 09:05 AM

வேடிக்கை பார்க்க வெளியே சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம். கண்ணீர் மல்க தனது உருக்கமான தகவலை பகிர்ந்து கொண்ட தாயார். சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் நகரில் அமைந்துள்ள டிராம்போலைன் அரங்கில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமணையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் கடந்த வியாழன் கிழமை அன்று இனிமேலும் சிகிச்சை அழிப்பது பலனை தராது ஏனெனில் சிறுமி மூளை சாவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக மறுநாள் காலை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் டிராம்போலைன் அரங்கில் பதிவான கேமரா காட்சியில் சிறுமி அசாதாரமான மற்றும் தைரியமான எதையும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சிறுமியுடன் இருந்த தோழிக்கு விபத்து குறித்து எந்த நினைவும் இல்லை என்றே தெரிகிறது.இது குறித்து அந்த சிறுமியின் தாயார் தனது உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வேடிக்கை பார்க்க வெளியே அனுப்பி வைத்தேன் ஆனால் அவள் திரும்பி வரவில்லை ,வாழ்க்கையில் நடப்பவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Related Posts