உமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…

சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த  பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக அனைவரும் கொண்டாடி வருகிறோம். ‘இந்த சிவராத்திரி அன்று, ஆதவன் மறைந்தது முதல், மறுநாள் காலை ஆதவன் உதயமாகும் வரை, மூலப்பொருள்  சிவனைப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமையவள் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார் என்பது புராணம். எனவே  மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியின் மகிமையை அறிந்து பயன்பெறுவோம்.

author avatar
Kaliraj