குழந்தைகளுக்கு பிடித்தமான நீர் தோசை செய்வது எப்படி?

சுவையான நீர் தோசை செய்யும் முறை. 

குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், குழந்தைகள் விரும்பி உண்ண கூடிய நீர் தோசை செய்வது எப்படி என்று பாப்போம்.

தேவையானவை

  • அரிசி – 1 கப்
  • உப்பு
  • எண்ணெய்
  • தண்ணீர்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்ய வேண்டும்.

அதன் பின், ஒரு தோசை சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடேற்றி பின், கரைத்த மாவை ஊற்றி  தோசை சுட வேண்டும். பின் ஒரு நிமிடம் வேக விட வேண்டும். இப்பொது சுவையான, சத்தான நீர் தோசை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.