பொள்ளாச்சியில் நடந்தது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க பெண்கள் செய்ய வேண்டியவை..!

தமிழகத்தின் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்க்குள்ளாக்கியுள்ளது. இந்த கொடுமையை நிகழ்த்திய படுபாவிகளுக்கு அரசு சரியான தண்டனையை உடனே வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது. என்ன தான் போராட்டம் செய்தாலும், கூச்சலிட்டாலும் அதற்கு தகுந்த பலன் கிடைக்காத நிலை தான் நம் தமிழகத்தில் நிலவி வருகிறது.

ஆகையால் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும், குறிப்பாக பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

அலைபேசி பயன்பாடு

மொபைல் என்பது இன்று உலகின் மூலை முடுக்கெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகிவிட்டது. அதனை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மொபைலில் உள்ள அமைப்புகள் பகுதியில், உங்கள் அனைத்துவித தகவல்களையும் ப்ரைவசி மோட் என்று கூறப்படும் தனிப்பட்ட தகவல்கள் நிலையில் அமைக்கவும். மேலும் உங்கள் மொபைலில் இருக்கும் தேவையற்ற செயலிகள், தேவையற்ற தொடர்பு எண்கள் ஆகியவற்றை நீக்கி விடவும்.

அழைப்புகள்

சமூக ஊடகங்கள், மொபைலில் வரும் அழைப்புகள் ஆகியவற்றில் தெரியாத நபரின் அழைப்பு வந்தால், அதை தவிர்த்து விடவும். தேவையற்ற அழைப்புகளை தவிர்ப்பது தேவையற்ற பிரச்சனைகள் உருவாகாமல் இருக்க உதவும்.

கேலரி போட்டோக்கள் மற்றும் கேமரா

உங்கள் மொபைலில் இருக்கும் முன் மற்றும் பின் கேமரா மீது இன்சுலேட்டட் டேப்பை ஒட்டிவைத்துக் கொண்டால், தேவையற்ற படங்கள் பதிவாவது தடுக்கப்படும்.

சமூக ஊடகங்கள்

முகநூல், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் உங்கள் புகைப்படங்களை பதிவிடுவதாக இருப்பின், அவை ஆபாசம் இல்லாமல், உங்கள் உடல் பாகங்களை அல்லது உடலமைப்பை வெளிப்படுத்துவதாக இல்லாமல், கவர்ச்சியானதாக இல்லாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

கவனம் அவசியம்

முடிந்த வரையில் பிரைவசி மோட் ஆன் செய்த பின், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டும் உங்கள் பதிவுகளை பார்க்கும் வகையில் – அதிலும் நெருங்கிய நண்பர்கள் கூட அவற்றை பதிவிறக்கம் செய்துவிடா வண்ணம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்; இந்த விஷயங்களில் அதிகம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

author avatar
Soundarya

Leave a Comment