இதை மட்டும் சாதாரணமா நெனச்சீராதீங்க….! கோதுமையில் உள்ள கொழுமையான மருத்துவ குணங்கள்….!!!

  • கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள்.

கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட.

கோதுமை

கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது.

Image result for கோதுமை

கோதுமையில், கால்சியம், இரும்பு, மாக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், செப்பு, செலீனியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது.

உடல் எடை

உடல் எடையை குறைப்பதில் கோதுமை மிக  வகிக்கிறது. கோதுமையில் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.

Image result for உடல் எடை

கோதுமையை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதால், நமது உடல் எடை குறைவதோடு, நமது உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

செரிமான பிரச்னை

செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு கோதுமை ஒரு சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்னை உள்ளவர்கள், மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

Image result for செரிமான பிரச்னை

கோதுமை நமது உடலில் உள்ள செரிமான பிரச்சனையை நீக்கி, செரிமானம் சீராக உதவுகிறது.

இதய நோய்

Related image

இதய நோய் உள்ளவர்களுக்கு கோதுமை ஒரு சிறந்த மருந்தாகும். இதய நோய் உள்ளவர்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை குறைப்பதோடு, இதயத்தை வலிமையாக்குகிறது.

புற்றுநோய்

Image result for புற்றுநோய்

கோதுமையில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. கோதுமையில், புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.

தைராயிடு

Image result for தைராயிடு

இன்று அதிமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்னை உள்ளவர்கள் மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, அதிகமாக கோதுமையினால், செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது.

நீரிழிவு

Image result for நீரிழிவு

நீரிவு நோய் உள்ளவர்களுக்கு, கோதுமை உணவு சிறந்த உணவாகும். கோதுமையில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமை உதவுகிறது.

இரத்த சோகை

Image result for இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்களுக்கு கோதுமை உணவு ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள சத்து இரத்த சோகையை நீக்கி, உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment