தர்பார் படம் இத்தனை கோடி நஷ்டமா.? புலம்பும் விநியோகஸ்தர்கள்.!

  • ரஜினியின் தர்பார் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சிலரிடமிருந்து கலவையான விமர்சனம் வந்தது.
  • தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. 

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவரது படம் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் சென்று படத்தை பார்த்து மகிழ்வார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி காந்த் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிலர் கலவையான விமர்சனமும் கொடுத்துள்ளார்கள்.

இத்திரைப்படம் பொங்கல் விடுமுறை தினங்களால் செம்ம வசூலை பெற்றது, போட்ட பணம் வந்துவிடும் என்று நினைத்த விநியோகஸ்தர்களுக்கு பிறகு பெரிய இடியாக விழுந்துள்ளது. தர்பார் தமிழகத்தில் ரூ.90 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால், இப்படம் வெற்றிக்கு இன்னும் ரூ.30 கோடி தேவையாம். இதனால், விநியோகஸ்தர்களுக்கு சுமார் 15 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை தர்பார் கொடுத்துள்ளதாக தெரிகின்றது. ரஜினியின் சமீப கால படங்கள் எதுவும் தற்போதுள்ள நடிகர்கள் விஜய், அஜித் அவர்களின் படங்களுக்கு இணையான வசூலை தமிழகத்தில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்