வெள்ளியங்கிரியில் வீடுகள் கட்ட கூடாது -உயர்நீதிமன்றம் தடை

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தமிழக அரசின் குடிசைமாற்று வாரியம் 4710  வீடுகளை கட்ட திட்டமிட்டது.இதனை எதிர்த்தும்,இதற்கு தடை கோரியும்   உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான  வழக்கை இன்று  விசாரித்த சென்னை  உயர்நீதிமன்றம்,குடிசை மாற்று வாரியம் சார்பில் மேற்கொண்டு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள  தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்று வனத்துறை கூறியிருந்த நிலையில் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.