பூமிக்கு குட்பை சொன்ன சந்திராயன் 2 !நிலவை நோக்கிய பயணம் தொடங்கியது

நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

ஜூலை 15 ஆம் தேதி  சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக முதலில் இஸ்ரோ தெரிவித்தது.ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விண்னில் ஏவப்படும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திராயன் 2  விண்கலம் பூமியை 23 நாட்கள் தொடர்ந்து பூமியை சுற்றி வந்தது.இந்த நிலையில் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து செயற்கைக்கோள் வெளியேறி,அதிகாலை  நிலவை நோக்கி சந்திராயன் 2 தனது பயணத்தை தொடங்கியது.இதனை இஸ்ரோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.