ஹெச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணியின் கணவருக்கு அரசு வேலை …!

கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர் செலுத்திய விவகாரம் தொடர்பாக நோயாளிகளுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹெச்ஐவி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை கூறியது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.அதில்  ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் 8 மாத சிசுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்கப்படும். கர்ப்பிணியின் கணவருக்கு அரசு சார்ப்பில் ஓட்டுநர் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment