தெலுங்கு திரைப்படத்தில் களமிறங்கும் கனா பட நாயகி….!!!

  • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான நடிகை.
  • நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கவுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான நடிகை. இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தர்மதுரை படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்திலும் நடித்திருந்தார். இப்படம் விளையாட்டு மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தை பீமனேனி சீனிவாசராவ் இயக்கவுள்ளார்.  ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment