லொஷ்லியாவின் உண்மை முகம் தெரிய வந்துள்ளதா? எதிர்ப்பான கருத்துக்களை தெரிவிக்கும் லொஷ்லியாவின் ரசிகர்கள்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

By leena | Published: Aug 13, 2019 11:08 AM

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் சுற்று நேற்று நடைபெற்றது. நாமிநேஷனில், கவின் லொஸ்லியா, அபிராமி, முகன் மற்றும் மதுமிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா மட்டும் தான் ஷெரீனை நாமினேட் செய்துள்ளார். இதற்கான காரணத்தை லொஸ்லியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஷெரீனை, சாக்ஷி பயன்படுத்தினார் என்ற காரணத்தினால் தான், அவரை நாமினேட் செய்ததாக கூறியுள்ளார். அவராக கூறியிருந்தால் பரவாயில்லை, அதை இன்னொருவர் மூலமாக சொல்ல வைத்தது சரி இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சாக்ஷியிடன் தர்சன் சொன்ன விடயங்கள் எதுவும் ஷெரீனுக்கு தெரியாது. என்ன நடந்தது என்பதை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனையடுத்து, நாட்கள் செல்லச்செல்ல தான் லொஸ்லியாவின் உண்மை முகம் தெரிய வருகிறதாக நெட்டிசன்கள்கூறுகின்றனர். இதுவரை லொஸ்லியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர்கள், தற்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc