வெட்ட முடியாத அளவிற்கு சர்ச்சை காட்சிகள்?! 'ஜிப்ஸி' வெளியிட தடை விதித்த சென்சார் போர்டு!

குக்கூ, ஜோக்கர் படம் மூலம் சமூக கருத்துள்ள படங்கள்  எடுத்து கவனம் ஈர்த்தவர்

By manikandan | Published: Sep 07, 2019 06:58 PM

குக்கூ, ஜோக்கர் படம் மூலம் சமூக கருத்துள்ள படங்கள்  எடுத்து கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜு முருகன். இவர் கடைசியாக இயக்கியுள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் நாடோடி மனிதனின் பயணம் குறித்தும், கதாநாயகன் சந்திக்கும் மனிதர்களை சுற்றி நடக்கும் படி கதை அமைந்துள்ளதாம். இப்படம் ரிலீஸ் செய்வதற்காக சென்சாருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் படத்தில் இந்து மதத்தினரை சங்கடப்படுத்தும் படியாக நிறைய காட்சிகள் இருந்துள்ளதாம் மேலும் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பற்றியும் அவதூறு பரப்பப்பட்டதாம் இதனால் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டதாம். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இப்பட சென்சாருக்காக மும்பை சென்றுள்ளதாம்.
Step2: Place in ads Display sections

unicc