தனது 21-வது வயதை வெற்றிகரமாக நிறைவு செய்த கூகுள்! #HappyBirthdayGoogle

தற்போது உலகில் பெரும்பாலானோர் தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முதலில் நாடுவது கூகுள் தான். இந்த இயங்குதளம் தற்போது இணையத்தில் இன்றியமையாகிவிட்டது. கூகுள் இல்லாத ஒரு ஸ்மார்ட் போன் கூட தற்போது இல்லை.

இந்த கூகுள் முதன் முதலாக கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கப்பட்டது. இதனை கலிபோரினியாவில் உள்ள ஸ்டாண்டர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் இந்த கூகுள் தேடுபொறியை கண்டுபிடித்தனர்.

இதற்கு முதன் முதலில் googol என்ற பெயர்தான் வைத்தனர். பின்னர் இதற்க்கு google என பெயர் வைக்கப்பட்டது.  இன்று தனது 21வது பிறந்தநாளை கூகுள் கொண்டாடி வருகிறது. இதனை இணையத்தில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.