கிடுகிடுவென உயர்ந்தது தங்கம் விலை.!

கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் ரூ.33,000 தாண்டியது. இரு தினங்களுக்கு

By balakaliyamoorthy | Published: Mar 06, 2020 11:28 AM

கடந்த வாரத்தில் கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கம் ரூ.33,000 தாண்டியது. இரு தினங்களுக்கு முன்னர் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.32,488-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் அதிரடியாக விலை உயந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து, ரூ.33,848க்கு விற்பனையாகிறது. இது விரைவில் ரூ.34,000த்தை தாண்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து, ரூ.50,700 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து, ரூ.50.70ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc