ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி ஆகிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் !

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யபா எம்.பி யாக முன்னாள் பிரதமர் மன்மோகன்

By dinesh | Published: Jul 06, 2019 06:26 PM

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யபா எம்.பி யாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் . கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இருந்து தேர்வாகியுள்ளார். மாநிலங்களவைக்கான உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக விடம் இருக்கும் 3 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை காங்கிரஸ் க்கு ஒதுக்க காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது.அந்த இடத்தில மன்மோகன் சிங் அவர்களை நிறுத்தவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் , மதிமுக விற்கு ஏற்கனவே ஒரு இடம் ஒதுக்க ஒப்புக்கொண்ட நிலையில் காங்கிரஸ் க்கு ராஜ்யசபா இடம் ஒதுக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். இரண்டு முறை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் அளிக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc