அ.தி.மு.க முன்னாள் எம்.பி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!

1986-1992 ஆண்டுகளில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்த ஆர்.டி.கோபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

1986 – 1992ம் ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி வகித்தவர் ஆர்.டி.கோபாலன். இவர் சில நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலமானார்.

இவர் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) ஆட்சி  காலத்தில் 1980ஆம் ஆண்டு கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு  தி.மு.க. வேட்பாளரான கம்பம் மகேந்திரனை சுமார் 47ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.