காற்றில் பறக்கும் ஊரடங்கு.! டெல்லி சந்தையில் அலைமோதும் வாகன கூட்டம்.!

கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிலும், பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க நெருக்கமான விவசாய சந்தைகளை அகற்றிவிட்டு வேறு விசாலமான இடங்களில் சந்தைகளை மாநில அரசுகள் அமைத்து தருகின்றன

அப்படி கூட்ட நெரிசலை தவிர்க்க டெல்லி அரசு, ஆசாதபுர் சப்ஜி சந்தை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. இருந்தும் அங்கு வாகன கூட்ட நெரிசல் அதிகப்படியாக இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையிலும் வாகன கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.