முதல் சோதனை வெற்றி..! 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த குவென்டாஸ் விமானம் சாதனை ..!

விமானங்களை இடையில் நிறுத்தாமல் சேவை வழங்க அனைத்து விமானங்களும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் உலகில் மிக நீண்ட தூரத்திற்கு விமானத்தை  நிறுத்தாமல் செல்வதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியாவின் குவென்டாஸ் விமான நிறுவனம் களமிறங்கியது.
இதற்கான முதல் சோதனை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சோதனை அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை விமானத்தை வைக்க முடிவு செய்தது செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம்  நியூயார்க்கில் இருந்து போயிங் 787-9 ரக விமானத்தை புறப்பட்டது.
19 மணிநேரம் 16 நிமிடங்கள் தொடர்ச்சியாக 16 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் இந்த விமானம் வானில் பறந்து நேற்று காலை சிட்னி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில் 49 பேர் பயணம் செய்தனர். இந்த விமானத்தை 4 விமானங்கள் இயக்கினர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் விமான பயணிகள்.
தற்போது இந்த முதல் சோதனையை வெற்றிகரமாக குவென்டாஸ் விமான நிறுவனம் முடிந்துள்ளது. இது போன்று 3 சோதனை நடத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் இரண்டாவது சோதனையாக  லண்டன் முதல் சிட்னி வரை விமானத்தை இயக்க உள்ளனர். மூன்றாவது முயற்சியை வெற்றிகரமாக முடிந்தால் 2023-ம் ஆண்டு பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

author avatar
murugan