கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்! நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 2விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வர தொடங்கியது. அதில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு, நிலவின் தரை பகுதியை நோக்கி தரையிறக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதிக்கு 2 கிமீ தூரம் இருக்கும் நிலையில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. லேண்டரை தேடும் பணியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் தேடிவந்தது.

இந்நிலையில் நாசாவின் லூனார் ரிககனைஸ்சஸ் ஆர்பிட்டரானது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுதிர்வரும்போது எடுத்த நிலவின் தரைப்பகுதி புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பிவைத்தது. இந்த புகைப்படங்கள் மூலம் விக்ரம் லெண்டரின் இருப்பிடம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை நாசா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.