கர்ப்பிணியைக் காப்பாற்ற ஆம்புலன்ஸை ஒட்டிய பெண் மருத்துவர்..!

மேகாலயா மாநிலத்தில் உள்ள கரோபதா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் பல்னாம்ஜி. அப்பகுதியிலுள்ள ஒரு கர்ப்பிணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த பல்னாம்ஜி இவருக்கு மேல் சிகிச்சை தேவை ஆனால் இங்கு போதிய வசதி இல்லை எனவே உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஆனால் அன்றைய அன்று ஆம்புலன்ஸ் டிரைவர்கள் விடுமுறையில் இருந்தனர். வேறு ஒரு ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் வேறொரு வாகனத்தில்  அனுப்ப பல்னாம்ஜி மனது வரவில்லை.
உடனே ஆம்புலன்ஸ் ஓட்ட முடிவு செய்த பல்னாம்ஜி 30 கிலோமீட்டர் தூரம் ஆம்புலன்ஸை   ஒட்டி டுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கர்ப்பிணி நலம் கருதி சிறப்பாக செயல்பட்டு மருத்துவருக்கு பல பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
murugan