6 வயது குழந்தைக்காக இந்தியாவை விட்டு வெளியேறும் குடும்பம்! என்ன காரணம் தெரியுமா?

டெல்லி அருகாமையில் உள்ள நொய்டாவில் மனோஜ் ஓஜா - துலிகா தமபதியினர் வசித்து வருகின்றனர்.

By leena | Published: Nov 08, 2019 03:52 PM

டெல்லி அருகாமையில் உள்ள நொய்டாவில் மனோஜ் ஓஜா - துலிகா தமபதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் பரிதி என்ற மகள் உள்ளார். இந்த குடும்பத்தினர் அந்த பகுதியில், நல்ல வேலை, சொந்த வீடு, லட்சக்கணக்கான வருமானம் என மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தற்போது இந்தியாவையே விட்டு வேறு நாட்டிற்கு செல்ல உள்ளதாக கூறுகின்றனர். இதற்கு காரணம் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தான். இவரது குழந்தை பருத்திக்கு சுவாச பிரச்னை உள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளார்களாம். காற்று மாசால் மூச்சி விடுவதற்கே சிரமப்படும் இவரை, மருத்துவர்கள் பரிசோதித்த்தில் அவரது சுவாச நிலை மோசமடைந்திருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தால் குழந்தை பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவிடுவாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்ற குழந்தைகளை போல் இந்த குழந்தையால் விளையாட முடியாமல், பள்ளிக்கு செல்ல முடியாமல் இருப்பதால், மருத்துவர்களிடம் இவரது பெற்றோர் இதற்க்கு இறுதியாக என்ன தீர்வு தான் உள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மருத்துவர், நீங்கள் இந்த இடததஹி விட்டு வேறு இடத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து, இந்த குடும்பத்தினர் இந்தியாவை விட்டு கனடா நாட்டிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளார்கள்.
Step2: Place in ads Display sections

unicc