ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம்.!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல முடியாததால் ஆன்லைன் வர்த்தகத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிகளவு லாபத்தை ஈட்டி வருகிறது. இதற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் ஒரு முடிவு எடுத்துள்ளது. 

இந்நிலையில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தனது வலைதளப்பக்கத்தில் வணிகர்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் அப்டேட் செய்திருந்தது. தற்போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யப்படும் பொருட்களை நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் வாங்கும் வகையில் வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் மூலம் அதிக அளவிளான வணிகர்களை உலகளாவிய வர்த்தகத்தில் ஒன்றிணைக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஜுக்கர்பெர்க், சிறு வணிக நிறுவனங்களில் பொருட்களையும் உலக அளவில் கொண்டு செய்வதே எங்களது நோக்கம் என தெரிவித்துள்ளார். மேலும், தற்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வெளியிடப்பட்டு வரும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை கிளிக் செய்தாலே பொருட்களை ஆர்டர் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார். இந்த புதிய வசதி இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்