தேர்தலை நடத்த கால அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தேர்தலை நடத்த கால அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தாயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது.  தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நிர்வாகியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.

இதைத்தொடர்ந்து, தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தாயாரிப்பாளர் சங்க தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அக்டோபர் 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube