நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு! சொந்த ஊர் செல்ல இயலாமல் மனமுடைந்த பூசாரி தூக்கிட்டு தற்கொலை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  இந்திய அரசு பல  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில் மற்றும் விமான உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் மகாராஷ்டிரா மாநிலம் சப்-அர்பன் கன்டிவாலி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் மிகவும் மன உளைச்சலால்  இருந்த நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி  ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் தனது ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி காத்திருந்தார்.
ஆனால், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணா தான் தங்கி இருந்த வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.