என்னை மன்னியுங்கள் அப்பா!நான் நல்ல பொண்ணு இல்ல என்று கடிதம் எழுதிவிட்டு தந்தையை கொன்ற மகள்!

ரெபெல்லோ என்பவர் ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.

By sulai | Published: Dec 11, 2019 11:42 PM

  • ரெபெல்லோ என்பவர் ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார்.
  • தனது காதலனுடன் சேர்ந்து ஆராதியா தந்தை ரெபெல்லோ தலையில் அடித்த கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் வசித்து வந்தவர் ரெபெல்லோ ஆவார்.இவர் ஒரு இசை கலைஞராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு வீதியில் அனாதையாய் சுற்றித்திரிந்த ஆராதியா பாட்டில் என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு அப்பகுதியில் வசிக்கும் பதினாறு வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.இதன் அடிப்படையில் ஆராதியா தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அப்பா என்னை மன்னியுங்கள் கடவுளே என்னை மன்னியுங்கள் நான் மிகவும் மோசமான பெண் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை தலையில் அடித்த அவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் ரெபெல்லோ இறந்ததை உறுதி செய்த அவர்கள் சடலத்தை மூன்று நாட்களாக வீட்டு கழிவறையில் வைத்து வந்துள்ளனர்.இந்த நேரத்தில் சடலத்தின் கால்களை ஸ்டவ் மீது வைத்து எரித்துள்ளனர். பின்னர் உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து மும்பையில் உள்ள மிதி ஆற்றின் கரையில் வீசி சென்றுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சூட்கேசில் இருந்த உடல் பாகங்களில் ரெபெல்லோ அணிந்திருந்த சட்டையில் அப்பகுதியில் உள்ள டெய்லர் கடையின் அடையாளம் இருந்ததை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு குற்றவாளிகளை கண்டறிந்த காவல் துறையினர் ஆராதியா பாட்டிலையும் அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.மேலும் விசாரணையில் தந்தை பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கொலை செய்ததாக ஆராதியா கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc