கண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க! உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ!

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான

By Fahad | Published: Apr 02 2020 08:37 AM

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே தங்களது சரும அழகு சம்பந்தமான பிரச்சனைகள் தான். இந்த பிரச்சனைகளுக்கு மிக விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக, பலரும் செயற்கையான வழியை தான் தேடி போவதுண்டு. ஆனால், இதனால் நமக்கு பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

செய்முறை - 1

தேவையானவை
  • சந்தனம்
  • பண்றீர்
செய்முறை  சந்தானம் மற்றும் பண்றீரை இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட்டாக செய்துக்க கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை தூங்க செல்வதற்கு முன்பு கண்களின் கீழ் தடவி கொள்ள வேண்டும். அதன் பின் காலையில் எழுந்தவுடன் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

செய்முறை-2

தேவையானவை
  • வெள்ளரிக்காய் விதை
  • தயிர்
செய்முறை  வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பாஸ்ட் போல செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டா கருவளையம் உள்ள இடத்தில் பூசி வந்தால், 1 மாதத்தில் கருவளையம் காணாமல் போய்விடும்.