தோனியாக இருக்க முயற்சிக்காதீர்கள் ரிஷப் ! அதுதான் உங்களுக்கு நல்லது – ஆடம் கில்கிறிஸ்ட்

நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று இளம் வீரர் ரிஷப்புக்கு ஆடம் கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார்.
கேப்டன் கூல் என்ற அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர் கேப்டனாக மட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை  படைத்து வருகிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆனால் கடந்த சில தொடர்களில் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்து வருபவர்தான் இளம் வீரர் ரிசப் பண்ட்.தோனிக்கு அடுத்தபடியாக பண்டை தான் கீப்பராக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த நிலையில் இளம் வீரர் பண்ட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,டோனியை யாருடனும் ஒப்பீடு செய்ய வேண்டாம்.குறிப்பாக பண்ட் தோனியின் கீப்பிங் ஸ்டைலை பின்பற்ற வேண்டாம்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்.தோனியிடம் இருந்து முடிந்தவரை யதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ ,அதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.