எந்தவித தயக்கமும், பயமும் இன்றி பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் – முதல்வர்

எந்தவித தயக்கமும், பயமும் இன்றி பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 14 நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்றும், சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தானம் செய்ய இயலாது.

தகுதியானவர்கள் எந்த தாக்கமும், பயமுமின்றி தானமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும்.’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.