பட்ஜெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

பட்ஜெட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

பட்ஜெட் என்ற வார்த்தை Bougette என்ற பிரெஞ்சு மொழியில் இருந்து வந்தது.Bougette என்ற வார்த்தைக்கு "தோல் பை" என பொருள்.  முன்பு ஒரு தோல்பையில் பட்ஜெட் குறித்த ஆவணங்களை பாதுகாப்பாக எடுத்து வந்து தாக்கல் செய்வார்கள். பின்னர் அது பட்ஜெட் என மாறியதாக கூறப்படுகிறது. இந்திய அரசிய சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லுக்கு அரசின் ஆண்டு நிதி அறிக்கை என உள்ளது. அரசின் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கணக்கிடுவதால் இதனை பட்ஜெட் என கூறுகிறோம். அரசியல் சட்டப்பிரிவு 112ன் படி நாட்டின் ஆண்டு வரவு செலவு கணக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்படி அறிக்கையை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவரின் அனுமதி பெற வேண்டும். அதன்பின்னரே தான் பட்ஜெட் என்கிற நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும். அதுவே  மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும். இதுவரை இந்தியாவில்  80 பட்ஜெட்களுக்கு மேல் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.பட்ஜெட் தயாரிப்பு மிகவும் பாதுகாப்பாகவும் , கவனமாகவும்  நடைபெற்று வருகிறது.முன்பு  பட்ஜெட் அச்சடிப்பு குடியரசு தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்படும்.அதன் பின்னர் டெல்லியில்  மிண்டோ சாலையில் உள்ள பாதுகாப்பு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டிற்குப்பிறகு நிதியமைச்சக அலுவலகத்தில் உள்ள ஒரு பிரதேயேக பகுதியில் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பின் போது பாதுகாப்பாக இருக்க அச்சடிக்கப்படும் பணியில் ஈடுபடுவார்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும்  அச்சடிக்கப்படும் பணியில் ஈடுபடுவார்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்க வைக்கப்பட்டு  உண்ண உணவு , மேலும் அவர்களுக்கு தேவைகள் அனைத்தும் வசதிகளும்  செய்து தரப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.    

Latest Posts

எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்   தர்ணா
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!