தல 60 படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா….?

தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான ஒருவர். இவர் நடித்துள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது மட்டுமல்லாமல், நல்ல வசூலை திரட்டியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்த படத்தை நடிக்கவுள்ளது. தல 60 படம் குறித்து இயக்குனர் வினோத் அவர்கள் பேட்டியளித்துள்ளார். இந்த பெட்டியில் அவர் கூறியதாவது, தல 60 படம் முழுக்க முழுக்க பிரெஷ் ஸ்கிரிப்ட், படு மாஸான பக்கா என்டர்டைனரான படமாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தல 60 படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment